தமிழ்த்தாய் வாழ்த்தையும் இரண்டு முறை பாடி இருக்கலாமே? என்ன காம்பிரமைஸ் நடந்தது? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி

22 June 20262 min read0 views
Kannan V
Kannan V

Kalvi World Editorial Desk

இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் இதுவரை இல்லாத அளவுக்கு இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டு காலமாக பின்பற்றப்பட்டு வந்த மரபு மாற்றப்பட்டுள்ளதாகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதே நேரம் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளித்த விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசிய கீதம் இரண்டு முறை இசைக்கப்பட்டது தொடர்பாக பெரியளவில் விமர்சனங்களை முன்வைக்கவில்லை.
gg
அதோடு தமிழ்த்தாய் முதலில் பாடப்படுவது தான் முக்கியம். அதனை தவெக அரசு செய்துள்ளது எனவும் ஆதரவாக கருத்து தெரிவித்தன. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சியான திமுக தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தது. இந்நிலையில் தற்போது சட்டமன்றத்தில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், இரண்டு முறை தேசிய கீதம் இசைக்கப்பட்டது தொடர்பாக கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

SUP-INT-2026-092


அவர் பேசுகையில், இந்த புதிய ஆட்சி அமைந்து சரியாக நாற்பது நாட்கள் ஆகியுள்ளது. ஆளுநர் உரையின் போது நாங்கள் தவெக அரசு ஏதாவது திட்டங்கள் செய்துள்ளார்கள் என்பது பற்றிய அறிவிப்பு இருக்குமென நானும், எங்களின் சட்டமன்ற உறுப்பினர்களும் காத்திருப்பில் இருந்தோம். அப்படி ஆளுநர் உரையில் எதுவுமே இடம்பெறவில்லை. எங்களுக்கு வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆளுநர் உரையின் போது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுங்கள் என்று சொல்லி இருந்தேன்.

அதே போல் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட்டு, இறுதியிலும் இசைக்கப்பட்டது. இதன் மூலமாக இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்ட வரம்பு மீறல் நடந்துள்ளது. இதுவரை கடைபிடிக்கப்பட்ட மரபு மாற்றப்பட்டு இருக்கிறது. இதே கோரிக்கையை முன்பிருந்த ஆளுநர் எங்களுடைய ஆட்சி காலத்திலும் முன்வைத்தார். ஆனால் எங்கள் தலைவர் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

மேயர் பிரியா மீது நடத்தப்பட்ட அப்பட்டமான அவதூறு நாடகம்: வெட்ட வெளிச்சமாகிவிட்டது - திமுக பதிவு
ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடந்தது. அப்போது அவர் கேட்டு கொண்டதின் படி வந்தே மாதரம், தேசிய கீதம் எல்லாம் பாடப்பட்டது. ஆனால் இப்போது ஆளுநர் உரை சட்டமன்ற உறுப்பினர்கள் பணி செய்யும், இந்த சட்டப்பேரவையில் தான் வாசிக்கப்பட்டது. இது நம்முடைய எல்லை. இதை ஆளுநரிடம் கொடுக்கும் அளவுக்கு என்ன காம்பிரமைஸ் நடந்தது என்பதை தமிழ்நாடு மக்கள் கேட்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த அவையில் வழக்கமாக நிகழ்ச்சி துவங்கும் போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். நிகழ்ச்சி முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்டும். அப்படி இருக்கையில் புதிதாக ஏன் இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது என்பது தான் கேள்வி. அதே போல் தமிழ்த்தாய் வாழ்த்தும் இரண்டு முறை பாடப்பட்டு இருக்கலாமே என்றார். மேலும், ஆளுநர் அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பேசி கொண்டு இருக்கிறார்கள். அப்படியென்றால் தமிழ்த்தாய் வாழ்த்தை விடவும் ஆளுநர் தான் உங்களுக்கு முக்கியம் என்ற எண்ணம் எங்களுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது எனவும் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

Instant Updates

Share this update with students and parents on WhatsApp.

Share on WhatsApp

Never Miss An Update

Get exam alerts and career news in your inbox.

Written By

Kannan V
Kannan V

Publishing verified education updates, exam guidance and student-focused opportunities from Kalvi World.

Discussion

Reader conversation

0

Explore Topics